கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, November 17, 2010

திருச்சிவாழைக்குழி கிராமத்தில் பகுதி நேர அங்காடித் திறப்பு

அரியலூர், நவ. 15: அரியலூர் மாவட்டம், ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி, வாழைக்குழி கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து, அங்காடியைத் திறந்துவைத்து மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி பேசியது:

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 411 நியாய விலைக் கடைகள் மூலம் 2.10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்தப் பகுதியில் வசித்து வரும் மக்கள் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள ஆலந்துறையார் கட்டளை அங்காடிக்குச் சென்று பொருள்களை வாங்கி வர வேண்டி இருந்து வந்தது.

தற்போது, வாழைக்குழி கிராமத்தில் பகுதி நேர அங்காடி திறக்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதி மக்கள் வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் பொருள்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், அத்தியாவசியப் பொருள்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். அங்காடிக்கு வந்து சேரும் பொருள்களில் காலதாமதம் ஏற்பட்டால் மறுநாள் வாங்கிச் செல்ல வேண்டும்.

மக்களுக்காக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செய்து வருகிறது. அரசு வழங்கும் நலத் திட்ட உதவிகளைப் பெற்று மக்கள் பயன் பெற வேண்டும் என்றார் பொன்னுசாமி.

விழாவுக்கு, அரியலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. பிச்சை, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.எம். குமார், ஊராட்சித் துணைத் தலைவர் வெ. குணசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் த. அறிவழகன், மண்டல இணைப் பதிவாளர் ஆர். ராமமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, அரியலூர் வட்டாட்சியர் கோவிந்தராஜுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க