கோவில் கும்பாபிஷேகம்

Thursday, July 10, 2014

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் சரவணவேல் ராஜ் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை கலெக்டர் சரவணவேல் ராஜ் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப் படுகிறது என்று கலெக் டர் சரவணவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;–

உதவித்தொகை

வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாத மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, மேல் நிலை தேர்ச்சி, பட்டப் படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந் தவராக இருக்க வேண்டும். 30.6.2009 அன்றோ அல் லது அதற்கு முன்னரோ புதிவு செய்தவராக இருக்கலாம்.

அவர்கள் உதவித்தொகை பெற அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த உதவித் தொகை பெற மனுதாரர் தங்களது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட் டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியினத் தவர்கள் 31.3.2014 அன்று 45 வயதை கடந்தவராக இருக்கக் கூடாது. மற்ற வகுப்பினர் இதே தேதியில் 40 வயதை கடந்தவராக இருக்கக் கூடாது.

விண்ணப்ப படிவம்

மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாண வியாக இருக்கக் கூடாது. ஆயினும் தொலைதூர கல்வி பயிலுபவ ராக இருக்கலாம். மனுதாரர் சுயமாக தொழில் எதுவும் செய்பவராக, சுயமாக சம்பாத்தியம் செய்பவராக இருக்கக் கூடாது.

புதிய விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31–ந் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அளிக் கலாம். மனுதாரர் விண்ணப் பப்படிவம் பெற அசல் ஆவணங்களுடன் வர வேண்டும். இதில் பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச்சான்றி தழ்கள், மாற்றுச்சான்றிதழ், வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Nandri : www.dinathanthi.com

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க