கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 30, 2010

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்

புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க அரியலூர் எம்எல்ஏ வலியுறுத்தல்
 
அரியலூர்,​​ மார்ச் 8: ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட 12 கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள்,​​ மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அரியலூர் தொகுதி ​ சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

​ ​ ​ ​ இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் பாளை.து.அமரமூர்த்தி,​​ மாநில நெடுஞ்சாலைத் துறை ​ அமைச்சர் சாமிநாதனிடம் அளித்த கோரிக்கை ​ மனுவில் கூறியிருப்பதாவது:

​ ​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ​ அயன்ஆத்தூர்-​ கிளிமங்களம்-​ அய்க்கால் வரை உள்ள சாலை,​​ ஆனந்தவாடி கிளிமங்களம்-காவனூர்-​ அம்பாபூர் சாலை,​​ அரியலூர்-​ ராவுத்தன்பட்டி-​ அயன்ஆத்தூர் இணைப்புச் ​ சாலை,​​ ராயம்புரம்-​ காவேரி பாளையம்-​ கடுகூர் ​ வரை உள்ள சாலை,​​ மணக்கால்-​ வெண்மணி இணைப்புச் சாலை,​​ கோவிந்தாபுரம்-​ மணக்கால்-​ நல்லாம்பத்தை-​ ஓ.கூத்தூர் வரையுள்ள இணைப்புச் ​ சாலை,​​ ஓட்டக்கோயில்-​ சாளையக்குறிச்சி-​ காவேரிபாக்கம் வரை உள்ள சாலை,​​ அரியலூர்-​ அம்மாக்குளம்-​ பொய்யூர் வரையிலான சாலை,​​ குறிச்சிநத்தம்-​ புதுப்பாளையம் சாலை,​​ கோப்பிலியன்குடிகாடு-​ பெரியநாகலூர் சாலை,​​ சீனிவாசபுரம்-​ மொரக்குழி-​ பொய்யூர் வரையிலான சாலை ஆகிய கிராமச் சாலைகளை நெடுஞ்சாலைத் துறையில் சேர்த்து,​​ புதிய சாலைகள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் அமைத்துத் தர வேண்டும்.

​ ​ ​ ​ கல்லகம்-​ திருமழபாடி சாலையில் ​ வெங்கனூர்-​ கோவில்எசனை கிராமங்களுக்கிடையில் உள்ள ஆண்டி ஓடைப்பாலம் பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.​ ​ இந்தப் பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட பழைய ​ மாவட்ட சாலைகளான மேலக்கருப்பூர்-​ ஏலாக்குறிச்சி சாலை,​​ மேலக்கருப்பூர்-​ விழுப்பனாங்குறிச்சி சாலை,​​ அரியலூர்-​ பொய்யூர் சாலை,​​ ​ பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை உள்ளிட்ட சாலைகளை பிரதான மாவட்டச் சாலைகளாக ​ தரம் உயர்த்தி இருவழிப் பாதைகளாக மாற்ற ​ வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதியில் உள்ள 5 கி.மீ.​ தொலைவுக்கு மேல் உள்ள ஒன்றியச் சாலைகள் ​ அனைத்தையும்,​​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சேர்த்து மேம்பாடு செய்ய வேண்டும்.

​ ​ ​ அரியலூர் தொகுதிக்குள்பட்ட ஊராட்சி ​ ஒன்றிய சாலைகளான சுண்டக்குடி-​ ஓரியூர் சாலை,​​ சுண்டக்குடி-​ சிலுப்பனூர் சாலை,​​ ​ அரியலூர்-​ முட்டுவாஞ்சேரி சாலை,​​ திருச்சி-​ சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செம்மந்தங்குடி செல்லும் சாலை,​​ பொய்யூர்-​ சுண்டக்குடி-​ வைப்பம் செல்லும் சாலை,​​ ​ கருவிடைச்சேரி செல்லும் சாலை,​​ ஓட்டக்கோயில்-​ ஓ.கூத்தூர் செல்லும் சாலை,​​ அரியலூர்-​ ஒ.கூத்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளை ​ நெடுஞ்சாலைத் துறையின் கீழ் எடுத்து மேம்பாடு செய்ய வேண்டும் என்று அவர் ​ கேட்டுக்கொண்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------
நன்றிகள் கட்டுநாட்டின் தளபதிக்கு. மதிப்புக்குரிய பாளை அமரமூர்த்தி அவர்களுக்கு நீங்கள் பொய்யூர்-​ சுண்டக்குடி சாலை புரனமைக்க எடுத்துள்ள முயற்சிக்கு கட்டுநாட்டின் சார்பாக நன்றிகள் தெரிவித்கொல்லுகிறேன்.
---------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க